tamilni 138 scaled
சினிமாபொழுதுபோக்கு

ராஜபக்சேவை சந்திக்க போகிறாரா நடிகர் விஜய்? சீமான் சும்மா விடுவாரா?

Share

ராஜபக்சேவை சந்திக்க போகிறாரா நடிகர் விஜய்? சீமான் சும்மா விடுவாரா?

நடிகர் விஜய் இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு ’கோட்’ படத்தின் படப்பிடிப்புக்காக செல்லும்போது ராஜபக்சேவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், கட்சியின் ஆலோசனை கூட்டத்தை சமீபத்தில் புதுச்சேரியில் நடத்தியதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் இலங்கையில் நடைபெற இருப்பதாகவும், சமீபத்தில் இலங்கை சென்ற இயக்குனர் வெங்கட் பிரபு லொகேஷன் பார்த்து விட்டு திரும்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கை வரும் விஜய்யை சந்திக்க ராஜபக்சே மற்றும் அவரது மகன் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இந்த சந்திப்புக்கு இலங்கை அமைச்சர் தொண்டைமான் ஏற்பாடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழர்களின் எதிரியாக கருதப்படும் ராஜபக்சேவை விஜய் சந்தித்தால், தமிழகத்தில் கடும் எதிர்வினைகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீமான் உள்ளிட்ட இலங்கை தமிழ் ஆதரவாளர்கள், விஜய் – ராஜபக்சே சந்திப்பு நடந்தால் கடுமையாக விமர்சிப்பார்கள் என்றும் அதன் பிறகு அவர் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே விஜய் இலங்கைக்கு செல்வாரா? அப்படியே சென்றாலும் நான் ராஜபக்சேவை சந்திப்பதை தவிர்ப்பாரா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share
தொடர்புடையது
33 6
சினிமா

புதுப் பையன் இல்லை, உங்கள் வேலையை பாருங்கள்.. கமலுக்கு சிம்பு கொடுத்த அதிரடி ரிப்ளை

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன்....

34 6
சினிமா

கண் கலங்கிவிட்டது.. மேடையில் எமோஷ்னலாக பேசிய சிம்பு

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் தக் லைப் படத்தின்...

32 6
சினிமா

ஸ்ரீலீலா இல்லை.. அந்த குத்துப்பாடலுக்கு நடனமாட இருப்பது இந்த முன்னணி நடிகையா?

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ராம் சரண். தெலுங்கு சினிமாவின்...

31 6
சினிமா

வெளிவந்தது நடிகை தமன்னாவின் அடுத்த பட அதிரடி அப்டேட்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும்...