tamilni 106 scaled
உலகம்செய்திகள்

மிஸ் ஜப்பான் அழகிப்பட்டம் வென்ற உக்ரைனிய பெண்: பட்டத்தை திருப்பிக் கொடுத்தார்…

Share

மிஸ் ஜப்பான் அழகிப்பட்டம் வென்ற உக்ரைனிய பெண்: பட்டத்தை திருப்பிக் கொடுத்தார்…

மிஸ் ஜப்பான் அழகியாக உக்ரைன் வம்சாவளி இளம்பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட விடயம், ஜப்பானில் கேள்விகள் எழ காரணமாக அமைந்தது.

சமீபத்தில் ஜப்பானில் நடந்த மிஸ் ஜப்பான் அழகிப் போட்டியில், கரோலினா ஷினோ (Carolina Shiino, 26) என்னும் இளம்பெண் முதலிடத்தைப் பிடித்தார். கரோலினாவின் தாய் உக்ரைன் நாட்டவர். ஆனால், அவர் ஜப்பான் நாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். கரோலினாவுக்கு 5 வயது ஆனதும் அவரது குடும்பம் ஜப்பானுக்குக் குடிபெயர்ந்துள்ளது.

கரோலினா மிஸ் ஜப்பான் அழகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஜப்பான் பரம்பரையில் வராத ஒரு பெண் எப்படி மிஸ் ஜப்பான் அழகியாக தேர்வு செய்யப்படலாம் என ஜப்பான் நாட்டு மக்கள் இணையத்தில் கேள்வி எழுப்பினார்கள். அத்துடன், ஐரோப்பிய முகங்கள்தான் அழகா, ஆசிய முகங்கள் அழகில்லையா என்னும் கோணத்திலும் கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், கரோலினா தனது மிஸ் ஜப்பான் அழகிப் பட்டத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார். ஆனால், அதற்கும், ஜப்பான் பரம்பரையில் வராத ஒரு பெண் மிஸ் ஜப்பான் அழகியாக தேர்வு செய்யப்பட்டதால் எழுந்த சர்ச்சைக்கும் தொடர்பில்லை.

கரோலினாவின் உக்ரைன் பின்னணி தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கிடையில், ஜப்பான் ஊடகமான Shukan Bunshun, கரோலினாவுக்கும் திருமணமான சமூக ஊடகப் பிரபலமும் மருத்துவருமான ஒரு ஆணுக்கும் தவறான தொடர்பு இருப்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டது.

அதை கரோலினா ஒப்புக்கொண்டதாக அழகிப்போட்டி நடத்தும் அமைப்பினர் நேற்று தெரிவித்த நிலையில், கரோலினா தனது அழகிப்பட்டத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...