3 1 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை! 6 பேர் கைது

Share

பிரித்தானியாவில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை! 6 பேர் கைது

வடக்கு அயர்லாந்தில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

வடக்கு அயர்லாந்தின் County Londonderry-யில் Limavady பகுதியில் 17 வயது சிறுவன் Blake Newland சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, Blake உடன் 50 வயது மதிக்கத்தக்க நபரும் காயமடைந்துள்ளார்.

இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சிறுவன் Blake சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குறித்த நபர் தொடர் சிகிச்சையில் உள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலை விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம், மேலும் அதிகாரிகள் அந்த பகுதியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...