tamilnaadi 1 scaled
சினிமாபொழுதுபோக்கு

சவால்விடும் சூப்பர் ஸ்டார்! தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு டீ-ஏஜிங் டெக்னாலஜி..?

Share

சவால்விடும் சூப்பர் ஸ்டார்! தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு டீ-ஏஜிங் டெக்னாலஜி..?

ஜெயிலர்‘ படத்தினுடைய பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இணையும் ‘தலைவர் 171’ படத்தை தயாரிக்க இருக்கிறது.

நடிகர் கமலை வைத்து ‘விக்ரம்’ என்ற பிரம்மாண்ட ஹிட் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ், ரஜினியை இயக்கவுள்ளது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

இன்னும் சில தினங்களில் பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது லால் சலாம் படம். படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டி கொடுத்துள்ள நடிகர் விஷ்ணு விஷால், இந்தப் படம் தனக்கு பதற்றத்தை கொடுக்கவில்லை என்றும் மாறாக ரசிகர்களுடன் இணைந்து ரஜினி ரசிகனாக படத்தை திரையரங்கில் பார்க்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், தற்போது படத்தின் கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, இதுவரை இல்லாதவகையில் வித்தியாசமான முறையில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் தலைவர் 171 படம் இருக்கும் என்று முன்னதாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பேட்டியில் கூறியிருந்தார்.

லோகேஷ் கனகராஜ் படங்களில் வழக்கமாக இருக்கும் போதைப்பொருள் குறித்த கதைக்களமாக இல்லாமல் படம் வித்தியாசமான முறையில் இருக்கும் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்தை இளமையாக காட்டும்வகையில் டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...