tamilnih 103 scaled
இந்தியாசெய்திகள்

நான் ஆட்சிக்கு வந்தால் CSK -வில் 11 வீரர்களும் தமிழர்கள் தான்.., சர்ச்சையாகும் சீமானின் பேச்சு

Share

நான் ஆட்சிக்கு வந்தால் CSK -வில் 11 வீரர்களும் தமிழர்கள் தான்.., சர்ச்சையாகும் சீமானின் பேச்சு

தான் ஆட்சிக்கு வந்துவிட்டால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் உள்ள 11 வீரர்களும் தமிழர்கள் தான் என்று சீமான் பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர் தனது தொண்டர்களின் கவனத்தை ஈர்க்க கோர்வையாகவும், உணர்ச்சி பொங்கவும் சில விடயங்களை பேசுவார். அப்படி பேசும் வீடியோக்கள் சில வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், “தான் ஆட்சிக்கு வந்துவிட்டால் ஐபிஎல் லீக்கில் தமிழ்நாடு அணியாக விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 11 வீரர்களும் தமிழர்கள் தான்.

அதில் நானும் ஒருவராக இருப்பேன்” என்று பேசினார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Indian Premier League எனப்படும் IPL, தனியார் அமைப்புகள் மூலம் நடத்தபப்டுகிறது. இதில், உள்நாட்டு வீரர்கள் முதல் சர்வதேச வீரர்கள் வரை ஏலம் விடப்படுகின்றனர். அப்போது அதிக தொகைக்கு ஏலம் எடுக்கும் அணியின் தரப்பில் விளையாடுவார்கள்.

இதில், போட்டியின் போது வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பாதுகாப்பது கொடுப்பதே மத்திய மாநில அரசுகளின் வேலை. இந்நிலையில், சீமான் தற்போது பேசிய கருத்து கிரிக்கெட் ஆர்வலர்கள் வரை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...

Untitled 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கோட்மலையில் வேன் 70 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்!

நுவரெலியா – கம்பொலை பிரதான வீதியில் கோட்மலை, கெராண்டி எல்லா பகுதிக்கு அருகே இன்று (ஏப்ரல்...