tamilni 448 scaled
இலங்கைசெய்திகள்

காலநிலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு

Share

காலநிலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை தற்காலிகமாக அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும் அநுராதபுரம், முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது சுமார் 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...