tamilni 433 scaled
உலகம்செய்திகள்

பயணத்தை ஆரம்பித்த உலகின் மிகப்பெரிய கப்பல்

Share

பயணத்தை ஆரம்பித்த உலகின் மிகப்பெரிய கப்பல்

அமெரிக்காவிலுள்ள றோயல் கரீபியன் கப்பல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட பயணிகள் கப்பல் மியாமி துறைமுகத்தில் இருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் தெற்கு புளோரிடாவிலிருந்து புறப்பட்டு, வெப்ப மண்டல தீவுகளைச் சுற்றி 7 நாட்கள் பயணம் செய்ய உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கப்பலுக்கு காற்பந்து வீரரான லியொனல் மெஸ்சி மற்றும் அமெரிக்காவில் உள்ள காற்பந்து கழகமான இன்டர் மியாமி (Inter Miami) குழுவினர் மூலம் ”ஐகொன் ஒப் த சீஸ்” (Icon of the Seas) என்று அதிகாரபூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் என்று கூறப்படும் இந்த கப்பலானது சுமார் 1,200 அடி நீளம் கொண்டதாகவும் மொத்தம் 20 தளங்களுடன் காணப்படுகின்றது.

இந்த கப்பலில் 6 நீர் சறுக்குகள், 7 நீச்சல் குளங்கள், பனி சறுக்கு வளையம், தியேட்டர் மற்றும் 40 இற்கும் மேற்பட்ட உணவகங்கள், பார்கள், ஓய்வறைகளை கொண்டமைந்துள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பலில் 2,350 பணியாளர்களுடன் அதிகபட்சமாக 7,600 பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

பயணிகள் கப்பல் குறித்து றோயல் கரீபியன் குழுமத்தின் தலைவர் ஜேசன் லிபர்டி கூறுகையில்,

“ஐகொன் ஆப் த சீஸ்” என்பது 50 ஆண்டுகளுக்கும் மேலான எங்கள் கனவுகள், புதுமைகள் மற்றும் முயற்சிகளின் வெளிப்பாட்டுடன் உலகின் மிகச்சிறந்த விடுமுறைக்கால அனுபவங்களையும் இது வழங்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...