tamilni 426 scaled
சினிமாசெய்திகள்

பவதாரிணி மறைவு.. இலங்கையில் நடைபெறவிருந்த இளையராஜா இசைநிகழ்ச்சி ரத்து

Share

பவதாரிணி மறைவு.. இலங்கையில் நடைபெறவிருந்த இளையராஜா இசைநிகழ்ச்சி ரத்து

பவதாரிணி மறைவால், இலங்கையில் நடைபெறுவதாக இருந்த இளையராஜா இசை நிகழ்ச்சி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரணி (47) புற்றுநோய் காரணமாக நேற்று இலங்கையில் உயிரிழந்தார். இவர், கடந்த 6 மாதங்களாகவே இலங்கையில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து, சென்னை தி நகரில் இருக்கும் இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அங்கு, திரையுலகினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர், இன்று இரவு சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் இலங்கை கொழும்புவில் நடைபெற இருந்த இளையராஜாவின், ‘என்றும் ராஜா ராஜாதான்’ என்ற இசை நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக, இலங்கை சென்றிருந்த அவர் மகளின் இறப்பு செய்தி கேட்டதும் மருத்துவமனைக்கு சென்றார். இந்நிலையில், இளையராஜாவின் இசைநிகழ்ச்சி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...