உலகம்
காசா யுத்தம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு
காசா யுத்தம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு
காசாவில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என ஐக்கியநாடுகளின் நீதிமன்றம் உத்தரவிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசாவில் இஸ்ரேல் யுத்த குற்றங்களில் ஈடுபடுவதாக தெரிவித்து தென்ஆபிரிக்கா தாக்கல் செய்துள்ள மனு மீதான தனது தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் இன்று (26.01.2024) வழங்கவுள்ளது.
இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்கா தாக்கல் செய்த மனுதொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வேளை இரண்டு தரப்பினரும் தமது தரப்பு வாதங்களை முன்வைத்திருந்தனர்.
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியம் இல்லை என்ற போதிலும் இந்த தீர்ப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்துவரும் தென்னாபிரிக்கா இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கைகளை இடைநிறுத்தவேண்டும் என்பது உட்பட 9 இடைக்கால உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளை தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டிற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.