tamil indian express 2021 12 29T110400.407
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயன் எனக்கு பணம் கொடுத்து அசிங்கப்படுத்திவிட்டார்- வருத்தமாக கூறிய பிரபலம்

Share

சிவகார்த்திகேயன் எனக்கு பணம் கொடுத்து அசிங்கப்படுத்திவிட்டார்- வருத்தமாக கூறிய பிரபலம்

சிவகார்த்திகேயன், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகம் கொடுக்க வேண்டும் என்பது இல்லை.

விஜய் டிவியில் இருந்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் கலக்கப்பேவது யாரு, ஜோடி நம்பர் 1 என அடுத்தடுத்து பணியாற்றி வந்தார்.

அப்படியே வெள்ளத்திரை வந்து கலக்கி வந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் தன்னுடன் பணியாற்றிய யாரையும் மறக்காமல் அவர்களுக்கு துணையாக இருந்து வருகிறார்.

தனது படங்களில் எப்போதுமே விஜய் டிவி பிரபலங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து விடுகிறார். எல்லோருக்கும் ஆதரவாக இருந்த சிவகார்த்திகேயன் ஒரு விஜய் டிவி பிரபலத்தை கஷ்டப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயனை சந்தித்துள்ளார் பிளாக் பாண்டி. அப்போது சிவகார்த்திகேயனுடன் பழகிய உரிமையில், சிவா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றுள்ளார்.

ஆனால் பிளாக் பாண்டியை கண்டுகொள்ளாமல் போனதாகவும், பின்னர் அவரது மேனேஜரிடம் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பியதாகவும் பாண்டி கூறியுள்ளார். இது தனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது, நான் அவரிடம் ஏதாவது நடிக்க வாய்ப்பு இருந்தால் கேட்கலாம் என நினைத்தேன்.

எனக்கு கை, கால் எல்லாம் நல்லா தான் இருக்கு, அப்படி இருக்கும் போது எனக்கு பணம் எதுக்கு என்பதால் சிவகார்த்திகேயன் மேனேஜர் கொடுத்த தொகையை வாங்கவில்லை.

ஆனால் சிவகார்த்திகேயனின் மேனேஜர் அவரிடம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை என சோகமாக பிளாக் பாண்டி கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...