tamilni 338 scaled
இலங்கைசெய்திகள்

நாடு முழுவதும் வற் வரி இன்றி பொருட்கள் விற்பனை

Share

நாடு முழுவதும் வற் வரி இன்றி பொருட்கள் விற்பனை

வற் வரி அறவிடாமல் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்வதற்காக நாடு முழுவதும் VAT FREE SHOP என்ற தொடர் கடைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தமது அமைச்சின் கீழ் இயங்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் இயங்கக்கூடிய பல இடங்கள் உள்ளதால், அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, போட்டி மற்றும் நியாயமான வர்த்தகத்தில் ஈடுபடத் தயாராக இருக்கும் மக்களுக்காக, காய்கறிகள், அரிசி, குழந்தைகளுக்கான பால் மா போன்ற வற் அல்லாத பொருட்களுக்கான கடைகளின் வலையமைப்பை நாடு முழுவதும் நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...