tamilnaadi 69 scaled
இலங்கைசெய்திகள்

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் சிறீதரன் உத்தரவாதம்

Share

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் சிறீதரன் உத்தரவாதம்

இலங்கை தமிழரசு கட்சியினுடைய வரலாற்றிலே ஒரு ஜனநாயக ரீதியான உரையாடல் ஊடாகவும் ஜனநாயக ரீதியான செயல்முறையின் ஊடாகவும் முக்கிய வரலாற்றை பதித்துள்ளதாக தமிழரசு கட்சியின் புதிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தன்னுடன் போட்டியிட்ட சுமந்திரன் மற்றும் யோகேஸ்வரனுடன் இணைந்து கட்சியுடைய செயற்பாட்டினை இன்னும் பல வழிகளில் தேசியத்தின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் தொடர்ந்து பொறுப்போடும் கடமையுடனும் செயற்படுவோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று (21) திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் குறித்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், என்னை தெரிவு செய்வதற்கு காரணமாக இருந்த இயற்கை என்னும் இறைவனுக்கும் எனக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அயராது உழைத்த அந்த பொதுசபை உறுப்பினர்களின் மிகப் பெறுமதியான வாக்குகளால் தவைவராக தெரிவு செய்ததற்கு முதலில் எனது நன்றிகள்.

இன்று இது பலபேருக்கு பல நம்பிக்கைகளை தந்திருக்கின்றது. பல இளைஞர் யுவதிகள் கட்சி பற்றிய அதிகமான அக்கறை கொள்ளவைத்துள்ளது.

என்னுடன் போட்டியிட்ட நண்பர் சுமந்திரன், யோகேஸ்வரனுடன் இணைந்து கட்சியுனுடைய செயற்பாட்டினை இன்னும் பல வழிகளில் எமது மக்களின் உரிமைக்காக தேசிய இருப்புக்காக தேசியத்தின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் தொடர்ந்து எங்களுடைய பொறுப்போடும் கடமையுடனும் செயற்படுவோம்.

அந்த கடமையை சரியாக செய்வோம். அதற்காக பல தடவை பல ஊடகங்கள் ஊடாக எங்களுடைய ஒற்றுமையையும் பலத்தையும் தெளிவுபடுத்தியிருந்தோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...