இலங்கை
ஜேர்மனியில் இரட்டை குடியுரிமைக்கு அனுமதி
ஜேர்மனியில் இரட்டை குடியுரிமைக்கு அனுமதி
ஜேர்மனியில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டமூலம் குடியுரிமை பெறுவதில் நிலவி வந்த சிக்கல்களை குறைக்கும் விதமாக அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியில் தற்போது வரை இரட்டை குடியுரிமை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இனிமேல் இரட்டை குடியுரிமையும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஜேர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) கொண்டு வந்திருக்கும் இந்த சட்டமூலம், 382-234 எனும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் தற்போது ஜெர்மனியில் 8 வருடங்கள் வசித்தவர்கள்தான் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும்.
இந்த சட்டமூலம் சட்டமானால், ஜெர்மனியில் 5 வருட காலங்கள் வசித்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.