tamilnih 84 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டில் அதிகரித்த தேங்காய் விலை

Share

இலங்கை சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் தேங்காய் விளைச்சலில் பற்றாக்குறை காணப்படுவதே இதற்கு காரணம் என தென்னை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மோசமான வானிலை காரணங்களால் தேங்காய் அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆண்டு முழுவதும் சுமார் 1500மிமீ மழைவீழ்ச்சியும், தென்னை அறுவடைக்கு சுமார் 28 செல்சியஸ் வெப்பநிலையும் தேவை.

ஆனால் கடந்த சில மாதங்களாக சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிகவும் வறண்ட வானிலையும் நிலவுகின்றமைாயால் இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, காலி மாவட்டத்தில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 80 ரூபா தொடக்கம் 120 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், அன்றாட உணவு தயாரிப்பதற்கு அத்தியாவசியமான தேங்காயின் விலை அதிகரித்துள்ளதால் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 35
செய்திகள்உலகம்

“ஹோர்முஸ் நீரிணையை நீங்களே கைப்பற்றுங்கள்”: நட்பு நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் அதிரடி அழைப்பு!

ஈரானுடனான போர் ஒரு தீர்க்கமான முடிவை எட்டியுள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எரிபொருள்...

Untitled 34
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் நீக்கம்!

இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்பரப்பில் இன்று (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத்...

Untitled 33
செய்திகள்உலகம்

எண்ணெய் சந்தையில் கடும் அதிர்ச்சி: ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 106 டொலராக உயர்வு!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகர காலமானார்: மாத்தறையின் மூத்த அரசியல் ஆளுமை மறைவு!

தென்னிலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான மகிந்த விஜேசேகர (Mahinda Wijesekera) தனது 83-ஆவது வயதில்...