tamilni 283 scaled
சினிமாபொழுதுபோக்கு

”பிக் பாஸ்” என் மரணப் படுக்கையிலும் மறக்காது! தனது ரசிகர்களுக்கு எமோஷனலாக கோரிக்கை விடுத்த மாயா

Share

பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் பங்கு பற்றியதுடன் இரண்டு வீடுகள், ஐந்து வைல்ட் கார்ட் என்ட்ரி என்று முற்றிலும் வித்தியாசமாக முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 106 நாட்களைக் கடந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்தது.

பிக் பாஸ் சீசன் 7 இன் வின்னராக அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். அவருக்கு அடுத்ததாக மணிசந்திரா, மாயா, தினேஷ், ஆகியோர் அடுத்தடுத்த ரன்னர் இடங்களை பெற்றனர்.

பிக் பாஸ் சீசன் 7ல் மக்களை மகிழ்விப்பதற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த மாயா, பல்வேறு என்டர்டைன்மெண்ட் செய்து வந்தார். ஆனாலும் அவருக்கு பிக் பாஸ் டைட்டில் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், பிக் பாஸ் மாயா தனது ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

என்னை மட்டும் ரசியுங்கள். என்னை போல மற்றவர்களையும் ரசியுங்கள். ஆனால் யாரையும் வெறுக்காதீர்கள். என்னை வெறுப்பவர்களாக இருந்தால் கூட அவர்களை வெறுக்காதீர்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்த 105 நாட்கள் மரணப் படுக்கையிலும் மறக்காதது. உங்களுக்காக உழைப்பேன். சந்திக்கலாம். எனக் கூறியதோடு தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் மாயா.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...