உலகம்செய்திகள்

பிரான்சின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் அரசியல்வாதி: செய்தித்தொடர்பாளரிலிருந்து பிரதமர் வரை…

Share
1 2 scaled
Share

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரான்சுக்கான அடுத்த பிரதமராக இளம் வயது அரசியல்வாதி ஒருவரைத் தேர்வு செய்துள்ளார்.

இமானுவல் மேக்ரானால் பிரான்ஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர், கேப்ரியல் அட்டால் (Gabriel Attal, 34). பிரான்ஸ் வரலாற்றில், இவ்வளவு இளம் வயதில் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் கேப்ரியல்தான்.

பத்து வருடங்களுக்கு முன் சுகாதார அமைச்சகத்தில் ஆலோசகராக இருந்தவர் கேப்ரியல். 2017ஆம் ஆண்டு மேக்ரான் தேர்தலில் வென்றபோது, கேப்ரியல் நாடாளுமன்ற உறுப்பினரானார். திறம்பட நாடாளுமன்றத்தில் வாதாடும் கேப்ரியல், மேக்ரானின் கவனத்தை ஈர்த்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

29 வயதில், கல்வித்துறையில் ஜூனியர் அமைச்சரான கேப்ரியலுக்கு, 2020இல் பிரான்ஸ் அரசின் செய்தித்தொடர்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

மேக்ரான் மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்றபோது, சிறிது காலம் பட்ஜெட் அமைச்சராக இருந்த கேப்ரியலுக்கு, கடந்த ஜூலையில் கல்வித்துறை கையளிக்கப்பட்டது.

இஸ்லாமியர்கள் அணியும் அபயாவுக்கெதிராக அவர் நடவடிக்கை எடுத்தபோது, எடுத்த விடயத்தில் உறுதியாக நிற்கும் கேப்ரியலின் உறுதி, மேக்ரானுக்கு தெரியவந்தது. பிள்ளைகளை வம்புக்கிழுப்பதற்கெதிராகவும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார் கேப்ரியல்.

ஆனால், அவை மட்டுமே மேக்ரான், கேப்ரியலை பிரதமராக தேர்வு செய்யக் காரணம் என்றும் கூறிவிடமுடியாது. ஏனென்றால், இதற்கு முன் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன், வெறும் 20 மாதங்கள் மட்டுமே பதவியில் நீடித்தார். அந்த 20 மாதங்களும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் திணறித்தான் வந்தார் அவர்.

ஆக, பிரபலமான கேப்ரியலை அந்த இடத்துக்குக் கொண்டு வந்துள்ளார் மேக்ரான். இன்னொரு முக்கிய விடயம், ஜூன் மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் வேறு நடைபெற உள்ளது. பிரான்ஸ் அரசை தேர்தலுக்கு வழிநடத்தும் பொறுப்பு கேப்ரியலுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் முக்கிய எதிராளியாகிய Marine Le Penஇன் கட்சியிலும், மக்களிடையே பிரபலமான இளம் அரசியல்வாதியான Jordan Bardella என்றொருவர் இருக்கிறார். அவருக்கு ஈடுகொடுக்கவேண்டுமானால், அவரைப்போலவே மக்களிடையே பிரபலமானவரான ஒரு ஆள் மேக்ரானுக்கு தேவை.

அதற்கு கேப்ரியல் சரியான ஆளாக இருப்பார் என மேக்ரான் கருதுகிறார். மொத்தத்தில், வரும் தேர்தல் முதலான விடயங்களுக்காக கவனமாக, காய் நகர்த்துகிறார் மேக்ரான் எனலாம்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...