R 8
இந்தியாசெய்திகள்

உதயநிதி தாத்தா வீட்டு காசில் பேருந்து நிலையம் கட்டப்பட்டதா என்ற சீமானின் கேள்விக்கு அமைச்சரின் பதில்

Share

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கருணாநிதியின் பெயரை வைப்பதில் தவறில்லை என சீமானுக்கு தமிழக அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.

சீமான் பேசியது..
சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 30 -ம் திகதி திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் செல்லும். இந்த பேருந்து நிலைய விவகாரத்திற்கு பல்வேறு சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்த போது, “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்ன உதயநிதி தாத்தா வீட்டு காசில் கட்டப்பட்டதா, அதற்கு ஏன் கலைஞர் கருணாநிதி பெயர் வைத்தீர்கள்.

அதிமுக ஆட்சியிலேயே பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் மீதமுள்ள பணிகளை தான் திமுக முடித்து வைத்துள்ளது” என்றார்.

தமிழக அமைச்சர் பேசியது…
இதற்கு பதிலளித்த தமிழக அமைச்சர் சேகர் பாபு, “தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டு, 80 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கலைஞர் கருணாநிதியின் பெயரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வைத்ததில் எந்த தவறும் இல்லை.

அனைத்து தமிழக மக்களுக்காக உழைத்த அனைவருக்கும் பெருமை சேர்ப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள ஆட்சி சீமானுக்கு பதிலாகக் கூற கடமைப்பட்டுள்ளேன் ” என்றார்.

Share
தொடர்புடையது
world 96
செய்திகள்உலகம்

14 மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்கா – ஈரான் இடையில் எஞ்சியுள்ள முரண்பாடுகள்!

மத்திய கிழக்கில் ஆறு வாரங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பாகிஸ்தான் தலைநகர்...

world 95
செய்திகள்இலங்கைபிராந்தியம்

75 மி.மீ. கனமழை மற்றும் உச்சத்தில் சூரியன்: இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம்!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை...

world 92
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடந்த வாரத்தில் மட்டும் 49 பேர் சாலை விபத்துகளில் பலி: போதையில் வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணம்!

இலங்கையில் கடந்த ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 10 வரையிலான ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம்...

world 94
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா – ஈரான் நேரடிப் பேச்சுவார்த்தை: முதல் கட்டம் நிறைவு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா...