tamilnaadi 12 scaled
சினிமாபொழுதுபோக்கு

அர்ச்சனாவுக்கு ஜால்ரா போடும் இணைய கைக்கூலிகள்.. கோர்த்துவிட்ட பிக்பாஸ்

Share

இப்போது சோசியல் மீடியாவில் பிக்பாஸ் சீசன் 7 பற்றிய விவாதம் தான் அதிகமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த நிகழ்ச்சி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தான் நகர்ந்து வருகிறது. இதில் உரிமைகுரல், ரெட் கார்டு போன்ற பஞ்சாயத்துக்களும் இருந்தது.

இப்படி பல சர்ச்சைகளை கிளப்பி டிஆர்பியில் முன்னணியில் இருந்த பிக்பாஸ் இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறது. அதன்படி மக்களின் பேராதரவை பெற்ற அர்ச்சனா தான் டைட்டிலை வெல்வார் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய் டிவியின் பிளானே வேறு மாதிரியாக இருக்கிறது.

அதாவது அர்ச்சனாவை ஓரம் கட்டி விட்டு மாயாவை டைட்டில் வின்னராக்க மறைமுக வேலைகள் நடந்து வருகிறது. அதனாலயே நேற்றைய நிகழ்ச்சியில் அர்ச்சனாவுக்கு பி ஆர் டீம் சப்போர்ட் செய்கிறது என்ற விஷயத்தை பிக்பாஸ் பற்ற வைத்தார்.

உண்மையில் அர்ச்சனா மட்டுமல்லாமல் பூர்ணிமா, விஷ்ணு, மாயா என அனைவருக்கும் ஒரு குழு இறங்கி வேலை பார்த்து வருகிறது. அந்த இணைய கூலிப்படைகள் தான். இவர்களைப் பற்றிய மீம்ஸ், பாசிட்டிவ் வீடியோக்கள் அனைத்தையும் ஷேர் செய்து வருகின்றனர்

அதேபோன்று ஓட்டு போடுவதிலும் பல தில்லாலங்கடி வேலைகளும் நடந்து வருகிறது. ஆனால் அவை அனைத்தும் சத்தம் இல்லாமல் நடந்த நிலையில் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் அதை அம்பலப்படுத்தி இருந்தார். இதன் மூலம் அர்ச்சனாவுக்கு டைட்டில் வராததற்கு இதுதான் காரணம் என்ற பிட்டை போடவும் விஜய் டிவி முடிவு செய்து இருக்கிறது.

ஆண்டவரும் வழக்கம் போல கொடுத்த ஸ்கிரிப்ட்டை அப்படியே உருட்டி மக்களின் மண்டையை கழுவுவார். இதுதான் இந்த சீசன் இறுதியில் நடக்கப் போகிறது. ஆக மொத்தம் மக்களின் ஓட்டுக்கும் ஆதரவுக்கும் எந்த மதிப்பும் இல்லை. அதேபோல் விஜய் டிவி முடிவெடுத்தபடியே மாயா டைட்டில் வின்னர் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...