tamilni 49 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் மகளின் தாக்குதலில் பலியான தந்தை

Share

காலி – வந்துரம்ப – கடம்புராவ பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகள் தாக்கியதில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை உணவில் மருந்துகளை கலப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அவர் தனது தந்தையை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்த தந்தை மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர் எனவும், அவரது மகளால் தாக்கப்பட்ட சிறிது நேரத்தில், அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரயவந்துள்ளது.

அப்போது தாயும் வீட்டில் இருந்ததாகவும், அவரும் அவரது மகளால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

22 வயதுடைய பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த தந்தை 54 வயதானவர் எனவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...