இலங்கை
புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு 2024இல் மிகப் பெரும் ஆபத்து
புலம்பெயர் நாடுகளை இலக்கு வைத்து இலங்கை புலனாய்வுத்துறை தற்போது செயற்பட்டு வருவதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு பல நாடுகளின் புலனாய்வு தகவல்கள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், பிரான்ஸை மட்டுமல்லாமல் பல புலம்பெயர் நாடுகளை இலக்கு வைத்து இலங்கை புலனாய்வுத்துறை செயற்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
அதாவது அமெரிக்காவிலிருந்து இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வந்த இரகசிய புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் தற்போது இலங்கை செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.