இலங்கை
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
வருடத்தின் முதல் நாளான இன்று(01.01.2024) இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (01.01.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.77 ரூபாவாகவும், கொள்வனவு விலை 319.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 249.87 ரூபாவாகவும், கொள்வனவு விலை 239.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 364.75 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 350.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 420.27 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 404.77 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.