tamilnaadi 1 scaled
இலங்கைசெய்திகள்

ரணில் விக்ரமசிங்க சிறந்த உலகத் தலைவர்

Share

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வல்லரசு நாடுகளின் தலைவர்களை விடவும் சிறந்த தலைவர் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதியால் மட்டுமே இலங்கைக்குப் பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், அனைவரும் ஒன்றிணைவோம் என ஜனாதிபதி தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வருகின்றார்.

நாம் பிளவுபட்டு நின்றால் தான் வெளிநாட்டு சக்திகள் நாட்டுக்குள் நுழையும். அரசியல் கட்சிகள் மற்றும் இடதுசாரிகள் தேசிய ஒற்றுமைக்காக ஒன்றிணைய வேண்டும்.

அப்போது ஜனாதிபதியால் பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும். நாம் பிரிந்து நின்றால் நாடு விழும். நாட்டை நிர்வகிக்ககூடிய சிறந்த தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பதால் தான் நாம் அவர் பின்னால் நிற்கின்றோம்.

அமெரிக்க ஜனாதிபதி பைடன், ரஷ்யா ஜனாதிபதி புடின் ஆகியோரை விடவும் ரணில் விக்ரமசிங்க சிறந்த தலைவர் என நான் குறிப்பிட்டிருந்தேன்.

ஆம். புடின் 1999 இல்தான் அரசியலுக்கு வந்தார். நாடுகள் பெரிதாக இருக்கலாம், சொத்துக்கள் இருக்கலாம். பொருளாதார ரீதியில் முன்னேறி இருக்கலாம். ஆனால், எமது நாட்டுத் தலைவருடன் ஒப்பிட முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்லும்போது, அவர் ஜனாதிபதி ஆவார் என கூறினோம். மறுநாள் எனக்குப் பைத்தியம் என்றார்கள். நடந்தது என்ன? ஏனெனில் ரணிலின் நகர்வுகள் எமக்குத் தெரியும் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....