செய்திகள்
அமைதியை பின்பற்றும் நாட்டுடன் பணியாற்றத் தயார்! – ஜோ பைடன்
அமைதியை பின்பற்றும் நாட்டுடன் பணியாற்றத் தயார்! – ஜோ பைடன்
அமைதியை பின்பற்றுகின்ற எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பல்வேறு நாட்டு தலைவர்களின் பங்கேற்புடன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நமது பாதுகாப்பு, வளர்ச்சி, சுதந்திரம் என்பவை ஒன்றுடனொன்று இணைந்தவை, இதன் முன்பு எப்பொழுமில்லாத வகையில் அதனோடு இணைந்து நாம் செயற்பட வேண்டும்.
இன்று பயங்கரவாத அச்சுறுத்தல்களை கொள்கிறோம். நாம் ஆப்கானிஸ்தானின் 20 ஆண்டு காலப் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம். இந்தப் போரை முடிப்பதற்கு அங்கு வெளியுறவுக்கொள்கை எனும் கதவுகளை திறந்துள்ளோம், எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் அமெரிக்கா சிறந்தவற்றையே வெளிப்படுத்தும்.
ஆயுதங்களால் கட்டுப்படுத்த முடியாத கொரோனாவை அறிவியல், அரசியல் சக்திகளால் வீழ்த்த முடியும். நாம் சிகிச்சைக்கான வசதிகளை விரிவாக்கி உலகிலுள்ள உயிர்களைக் காக்க வேண்டும், உலக சுகாதார பாதுகாப்பு நிதிக்காக நாம் புதிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும்,
அமெரிக்க இராணுவசக்தி எமது முதல் ஆயுதமல்ல, அது எமது இறுதி ஆயுதம், பிளவுபட்டு காணப்படும் உலகில் நாம் மீண்டும் பனிப்போரை உருவாக்க முயற்சி செய்யவில்லை .
எமது தோல்விகளால் பல விளைவுகளை எதிர்கொண்டுள்ளோம், 20 வருடங்குகளுக்கு முன்னர் 9/11 தாக்குதலின்போது இருந்த அமெரிக்கா இப்பொழுது இல்லை , இன்று சிறந்த ஆயுதங்கள் மற்றும் அதிக திறமையோடு உள்ளோம், எதிர் பிரசாரங்களை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளோம்
அமைதியைப் பின்பற்றுகின்ற எந்த நாட்டுடனும் அமெரிக்கா சேர்ந்து பணியாற்றுவதற்கு தயாராகவே உள்ளது – என்று மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login