tamilni 480 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பு வைத்தியசாலையின் இளம் பெண் தாதி மர்ம மரணம்

Share

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றிய தாதி ஒருவரின் திடீர் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பண்டாரவளை மகுலெல்ல பிரதேசத்தில் வசித்து வந்த 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட குறித்த தாதி, தனது பயிற்சிக் காலத்தை முடித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றி வந்தார்.

கடந்த 25ஆம் திகதி பண்டாரவளை பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு விடுமுறை எடுத்துக்கொண்டு திரும்பி வந்து 26ஆம் திகதி உல்லாசப் பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.

காலை உணவு பெற சென்ற போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், இந்த தாதி பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது, ​ உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும், மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை. எனவே மரணம் தொடர்பில் வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பரிசோதனைகளுக்காக உடல் உறுப்புகளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மகளுக்கு உடல்நிலையில் எவ்வித பாதிப்பும் காணப்படவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....