3 16 scaled
உலகம்செய்திகள்

கிறிஸ்துமஸ் நாளில் வெறிச்சோடிய பெத்லஹேம்!பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

Share

கிறிஸ்துமஸ் நாளில் வெறிச்சோடிய பெத்லஹேம்!பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கு இடையே நடைபெறும் போர் காரணமாக கிறிஸ்துமஸ் நாளான இன்று பெத்லஹேம் நகரம் களையிழந்து காணப்படுகிறது.

இயேசு கிறிஸ்து பிறந்ததாக கிறிஸ்துவர்களால் நம்பப்படும் பெத்லஹேம் நகரம் ஜெருசலேமின் தெற்கில் அமைந்துள்ளது. இங்கு உள்ள ‘Church of the Nativity’ தேவாலயத்தை காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள், சுற்றுலாப் பயணிகள் வருவர். முக்கியமாக, கிறிஸ்துமஸ் நாளில் பெத்லஹேம் நகரமே விழாக்கோலம் போல காட்சியளிக்கும்.

இந்நிலையில், கடந்த ஒக்டோபர் 7-ம் திகதி முதல் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக் குழு இடையே போர் நடைபெற்று வருகிறது.

இதனால்,வெஸ்ட் பேங்கில் அதிகரித்த வன்முறையால் பெத்லஹேமிற்கு வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் யாரும் வரவில்லை என அங்குள்ள வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து பெத்லஹேமில் பல தலைமுறைகளாக உள்ள அலெக்சாண்ட்ரியா என்ற ஹோட்டல் உரிமையாளர் ஜோய் கனாவதி, “இந்த ஆண்டுகிறிஸ்துமஸ் மோசமானதாக மாறிவிட்டது. கிறிஸ்துமஸ் மரம் இல்லை, மகிழ்ச்சி இல்லை, உற்சாகமில்லை. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பெத்லஹேம் மூடப்பட்டுள்ளது” என்றார்.

Church of the Nativity தேவாலயத்தை காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள், சுற்றுலாப் பயணிகளால் வரும் வணிகத்தை நம்பி இந்நகரத்தின் பொருளாதாரம் உள்ளது. தற்போது, விடுதிகள், உணவகங்கள் மற்றும் பரிசுபொருள் விற்பனை கடைகள் மூடப்பட்டு பெத்லஹேமே களையிழந்த நிலையில் உள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...