tamilni 397 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட சித்திரவதை கூடம்

Share

தென்னிலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட சித்திரவதை கூடம்

தென்னிலங்கையில் வீடொன்றில் செயற்பட்டு வந்த சித்திரவதை கூடம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

களுத்துறையில் போதைப்பொருள் தொடர்பான பணத் தகராறு காரணமாக நபர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கிய கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது கைது செய்யப்பட்டுளள்னர்.

களுத்துறை, கலமுல்ல, லாகோஸ்வத்த பிரதேசத்தில் வைத்து 18, 20, 25, 27 மற்றும் 28 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தப் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, ​​வீடு புகுந்த போது வீட்டில் இருந்த பலர் தப்பி ஓடியுள்ளனர்.

இதன்போது வீட்டில் கை கால்கள் கட்டப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இளைஞனை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.

அந்த வீடு சித்திரதைக்கூடம் போன்று செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சோதனையின் போது இளைஞனை தாக்கிய 3 கூரிய வாள்கள், போதைப் பொருட்கள் அடங்கிய சிறிய பொதிகள், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பொதியிடும் பொருட்கள் என்பன காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...

25 68747c5f98296
செய்திகள்இலங்கை

நடிகர் சரத்குமார் இலங்கை வருகை: நான்கு நாட்கள் தங்கத் திட்டம்!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சரத்குமார், இன்று (நவ 05) காலை இலங்கையை வந்தடைந்தார். நாட்டின்...