செய்திகள்
மீண்டும் பிரதமரானார் ஜஸ்டின் ட்ரூடோ!
மீண்டும் பிரதமரானார் ஜஸ்டின் ட்ரூடோ!
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 3 ஆவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளது.
கனடாவில் நேற்று (21) நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்சி 156 இடங்களில் வெற்றி, பெற்று முன்னிலையில் உள்ளது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
கனடாவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடாத்தப்படும். ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை
ஆனாலும் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில் கடந்த 2 வருடங்களாக ஜஸ்டின் ட்ரூண்டோ கனடாவின் பிரதமராக இருந்துள்ளார் .
ஆனாலும் பெரும்பான்மையில்லாது ஆட்சி நடாத்துவது ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடினமாக இருந்துள்ளமையால் கடந்த ஆகஸ்ட் 15ஆம் திகதி கனேடிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது .
இந்நிலையிலேயே நேற்று (21)தேர்தல் இடம்பெற்றுள்ளது .
லிபரல் கட்சி சார்பில் ஜஸ்டின் ட்ரூடோ, கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் எரின் ஓ டூல் ஆகியோர் சின்ஹா தேர்தலில் களமிறங்கினர்.
இந்த நிலையில் இன்று வெளியாகிய தேர்தல் முடிவுகளின்படி ஆளும் லிபரல் கட்சி 156 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் .
ஆனால் பெரும்பான்மையை பெற 170 இடங்கள் வேண்டும் என்ற நிலையில் .மீண்டும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாது போய்விட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கனடாவில் நடைபெற்றுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட்ட இலங்கைத்தமிழர் ஹரி ஆனந்த சங்கரி பெரும்பான்மை வாக்குகளால் வெற்றியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login