rtjy 89 scaled
உலகம்செய்திகள்

PhD படிக்க இங்கு Register செய்யுங்கள்.. நித்யானந்தாவின் புது அறிவிப்பு

Share

PhD படிக்க இங்கு Register செய்யுங்கள்.. நித்யானந்தாவின் புது அறிவிப்பு

நித்யானந்தா தரப்பில் இருந்து பி.எச்.டி படிப்பு பற்றிய புது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதுடன், அந்நாட்டிற்கு என தனி கொடி, ரூபாய் நாணயங்கள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை அறிவித்தார்.

மேலும், பல்வேறு நாடுகளுடன் வர்த்தகம் ரீதியாக ஒப்பந்தம் செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

கைலாசா சார்பில் ஐ.நா சபை மாநாட்டில் பிரதிநிதிகள் கலந்து கொண்டதும் சர்ச்சையை கிளப்பியது.

அண்மையில், பராகுவே நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் கைலாசா நாட்டுடன் செய்த ஒப்பந்தம் தொடர்பாக அவரது பதவி பறிக்கப்பட்டது.

இந்நிலையில் புது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “கைலாசாவுக்கு வர முடியாது என்கிற கவலையை விடுங்கள். கைலாசா உங்களை தேடி வரப்போகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “நீங்கள் எங்கு இருந்தாலும் பட்டங்கள் மற்றும் முனைவர் பட்ட வாய்ப்புகளுடன் கைலாசா உங்களை தேடி வரும். ஆன்மீகமும் அறிவியலும் கொண்ட பி.எச்.டி படிப்பு மேற்கொள்ள உங்களை தேடி வரும்.

இன்றே பி.எச்.டி. பயில நித்யானந்தா இந்து பல்கலைக்கழகத்தில் சேர பதிவு செய்யுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது, இந்த புதிய அறிவிப்பு சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...