rtjy 88 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் தாக்குதல் நடத்த திட்டம்: ஹமாஸ் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் கைது

Share

ஜேர்மனியில் தாக்குதல் நடத்த திட்டம்: ஹமாஸ் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் கைது

ஜேர்மனியில் யூதர்கள் வாழும் இடங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேரை ஜேர்மன் அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் ஜேர்மன் அதிகாரிகள் நடத்திய ரெய்டுகளில், ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அதன் தொடர்ச்சியாக, ஜேர்மன் அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில், நெதர்லாந்து நாட்டிலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் லெபனான் மற்றும் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தாக்குதல் நடத்த தயார் நிலையில்…
கைது செய்யப்பட்ட நான்குபேரும் நீண்ட காலமாக ஹமாஸ் அமைப்பில் உறுப்பினர்கள் என நம்பப்படுகிறது. ஹமாஸ் அமைப்பின் ஆயுதப்பிரிவின் தலைவருடன் அவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

அந்த நான்கு பேரில் ஒருவரான Abdelhamid Al A என்பவருக்கு, லெபனானிலுள்ள ஹமாஸ் தலைவர்கள் ஆயுதக்கிடங்கு ஒன்றின் பொறுப்பைக் கொடுத்துள்ளார்கள்.

அந்த ஆயுதங்களை ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்குக் கொண்டுவந்து, யூத அமைப்புகளுக்கெதிராக தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படும்போது, அவற்றை தாக்குதலில் பயன்படுத்தும் வகையில் தயாராக வைத்திருக்க திட்டமிடப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...