tamilni 253 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி

Share

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி

நாடளாவிய ரீதியிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள், வர்த்தக நிலையங்களில் வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் வெங்காயம் 400 ரூபா முதல் 470 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 400 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா வெங்காயம் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளைவிதித்துள்ளமையே இதற்கான காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பெரிய வெங்காய விவசாயிகள் பலர் விளைச்சலுக்குரிய விலை கிடைக்காமை, உரிய நேரத்தில் உரம், கிருமிநாசினி கிடைக்காமை உள்ளிட்ட காரணங்களினால் தற்போது பெரிய வெங்காய உற்பத்தியிலிருந்து விலகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...