உலகம்செய்திகள்

இனவெறியைக் கக்கும் இஸ்ரேல் வீரர்கள்: வெளியாகிய ஆதாரங்கள்

Share

இனவெறியைக் கக்கும் இஸ்ரேல் வீரர்கள்: வெளியாகிய ஆதாரங்கள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் மூன்றாவது மாதமாகத் தொடர்ந்துவரும் நிலையில் இஸ்ரேல் வீரர்களின் இழிவான செயற்பாடுகள் குறித்தது அண்மையில் வெளியாகிவரும் காணொளிகள் இஸ்ரேல் மீதான மதிப்பை குறைப்பதாக அமைந்துள்ளது.

இந்தப்போரில் சர்வதேச அளவில் இஸ்ரேலின் போர் நெறிகள் குறித்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்துவரும் நிலையில், இஸ்ரேல் வீரர்களும் இவ்வாறு இழிவாக நடந்து கொள்வது இஸ்ரேலுக்குத் தலைவலியை உருவாக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.

வெளியாகியுள்ள காணொளிகளில் இஸ்ரேலிய வீரர்கள் காசாவில் உள்ள பொம்மைக் கடை ஒன்றைத் தகர்ப்பதும் பொம்மைகளின் தலையைத் துண்டிப்பதும் கைவிடப்பட்ட உணவு மற்றும் குடிநீர் டிரக்கை தீயிட்டு கொளுத்துவதுமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், ஒரு இஸ்ரேல் வீரர் காசாவின் வீட்டிற்குள் நுழைந்து அலமாரிகளில் உள்ள உள்ளாடைகளைப் படமெடுக்கிற காணொளி ஒன்றும் மற்றொரு வீரர் இஸ்லாமியர்களின் வழிபாட்டுக்கான விரிப்புகளைக் கழிவறையில் தூக்கி வீசுகிற காணொளியும் வெளியாகி அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

தவிரவும், வெறுப்புப் பிரசாரப் பாடல்களைப் பாடி இஸ்ரேல் வீரர்கள் வட்டமாக நடனமிடுவது போலான காணொளிகளும் கூட வெளியிடப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடுமையாக இடம்பெற்று வரும் போருக்கு இடையில், வீரர்கள் இவ்வாறு பொருத்தமில்லாது தீங்கிழைக்கும் வகையில் நடந்து கொள்வது இது முதல் முறை இல்லை என்ற போதிலும் அண்மையில் வெளியாகியுள்ள இந்தக் காணொளிகள் தேசத்தின் ஒட்டுமொத்த இனவெறி மனநிலையைக் காண்பிப்பதாக அமைந்துள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட இஸ்ரேலிய மனித உரிமைகள் செயற்பாட்டாளர் டிரார் சடோட், மனிதநேயமற்ற தன்மை தலைவர்களிடம் இருந்து வீரர்களுக்குக் கடத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த நிகழ்வுகள், இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பின் நெறிகளுக்குப் பொருந்தாது எனவும், இவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இஸ்ரேல் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...