5 13 scaled
உலகம்செய்திகள்

அர்ஜென்டினா ஜனாதிபதியாக பதவியேற்ற மினி Trump; பணவீக்கம் 200 சதவீதத்தை எட்டும் என எச்சரிக்கை

Share

அர்ஜென்டினா ஜனாதிபதியாக பதவியேற்ற மினி Trump; பணவீக்கம் 200 சதவீதத்தை எட்டும் என எச்சரிக்கை

அர்ஜென்டினாவின் ஜனாதிபதியாக ஜேவியர் மிலி (Javier Milei) பதவியேற்றார்.

ஜேவியர் மிலி மக்களுக்கான தனது முதல் உரையில், நாட்டில் பணவீக்கம் 200 சதவீதத்தை எட்டக்கூடும் என்று எச்சரித்தார். குறுகிய காலத்தில் பொருளாதாரம் மோசமாக இருக்கும் என்று மிலி கூறினார். இருப்பினும், அவற்றை பெரிதும் பொருட்படுத்தாமல், அவரது ஆதரவாளர்களின் கூட்டம் ஆரவாரம் செய்தது.

வெளியேறப்போகும் அரசாங்கம் நாட்டை அதிக பணவீக்கத்திற்கான பாதையில் இட்டுச் சென்றுள்ளது என்று கூறிய மிலி, இதுபோன்ற துயரங்களைத் தவிர்க்க முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றார்.

கருக்கலைப்பை கடுமையாக எதிர்க்கும் 53 வயதான மிலி தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது கருக்கலைப்பு மீண்டும் குற்றமாக்கப்படும் என்று அறிவித்தார்.

அர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற Mini Trump; பணவீக்கம் 200 சதவீதத்தை எட்டும் என எச்சரிக்கை

1983-ல் நாட்டில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டதிலிருந்து ஜேவியர் மிலி மிகப்பாரிய பெரும்பான்மையைப் பெற்றார்.

மிலியின் வெற்றி, இடது மற்றும் வலது இரண்டு முக்கிய அரசியல் சக்திகளின் மேலாதிக்கத்தை உடைத்தது. 1940களில் இருந்து அர்ஜென்டினா அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த Peronistகளையும், அவர்களின் முக்கிய எதிர்க்கட்சியான Juntos por el Cambio கட்சியையும் மிலி எதிர்கொண்டு வெற்றிபெற்றார்.

வலதுசாரி La Libertad Avanza கட்சி வேட்பாளர் Javier Millay 56 சதவீத வாக்குகளை பெற்று அர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சி வேட்பாளரும் தற்போதைய அரசாங்கத்தின் நிதி அமைச்சருமான Sergio Massa 44.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் Donald Trump-உடன் உள்ள ஒற்றுமையால் ஜேவியர் ‘Mini Trump’ என்று அழைக்கப்படுகிறார். தான் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்பைக் கட்டுப்படுத்துவேன் என்று அறிவித்த ஜேவியர், துப்பாக்கி உரிமை மற்றும் உறுப்பு விற்பனைக்கு ஆதரவாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.

ஜேவியர் ஒரு நிதி நிபுணரும் கூட. பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் இரண்டு முதுகலை பட்டங்களுடன், மைலி பல்வேறு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...