tamilni 166 scaled
இலங்கைசெய்திகள்

பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி!

Share

பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி!

பதவி உயர்வு பெறுவதில் பெண் பொலிஸ் அதிகாரிகள், அநீதிக்கு ஆளாகியுள்ளதாக நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஆட்சேர்ப்பு, பயிற்சி, பணியமர்த்தல் மற்றும் ஓய்வு பெறுதல் போன்ற அனைத்து அம்சங்களும் ஆண் பொலிஸ் அதிகாரிகளுக்கு சமமாக பெண் பொலிஸ் அதிகாரிகள் பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளை ஆராய்ந்து அறிக்கையிடும் நாடாளுமன்ற தெரிவுக்குழு அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேயின் தலைமையில் கூடியது.

இதன்போது 92 பெண் தலைமை ஆய்வாளர்கள் இருபத்து ஆறு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளனர். இதனை தவிர தலைமை பொலிஸ் ஆய்வாளர் பதவியில் பெண் ஒருவர் நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார்.

எனினும் அவர்களின் பதவி உயர்வுகளில் கவனம் செலுத்தப்படவில்லை என்று நாடாளுமன்ற குழு குறிப்பிட்டுள்ளது.

ஆண் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது வெற்றிடங்கள் தொடர்பான பிரச்சினை இல்லை.

எனினும் பெண் உத்தியோகத்தர்களே வெற்றிடங்கள் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் அதிகாரிகள் முறையிட்டுள்ளனர்.

இந்தநிலையில் அநீதி நிலைமையை தவிர்க்க, இலங்கை பொலிஸ் துறையில் 15 வீதத்துக்கும் அதிகமான பெண் அதிகாரிகள் இருப்பதால், அனைத்து பதவிகளிலும் 15 வீதப் பெண் பிரதிநிதித்துவத்திற்கான வெற்றிடங்களை உருவாக்க நாடாளுமன்றக்குழு முன்மொழிந்துள்ளது.

Share
தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....