2 5 scaled
உலகம்செய்திகள்

காசாவில் நடந்த சண்டையில் இந்திய வம்சாவளி வீரர் உயிரிழப்பு: இஸ்ரேல் பாதுகாப்பு துறை வருத்தம்

Share

காசாவில் நடந்த சண்டையில் இந்திய வம்சாவளி வீரர் உயிரிழப்பு: இஸ்ரேல் பாதுகாப்பு துறை வருத்தம்

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை கடந்த அக்டோபர் மாதம் 7ம் திகதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த போர் தாக்குதலில் கடந்த சில வாரங்களாக ஹமாஸ் பகுதியான காசாவிற்குள் இஸ்ரேலிய ராணுவம் தரைவழி தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

இதனால் இருதரப்பிலும் நூற்றுக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காசா எல்லையில் நடைபெற்ற சண்டையின் போது இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்ரேல் ராணுவ வீரர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மோதலில் ஆஷ்டோட் பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளி இஸ்ரேலிய ராணுவ வீரர் கில் டேனியல்ஸ்(34) கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்த தகவலில், காசா எல்லையில் நடந்த சண்டையில் கில் டேனியல்ஸ் உடன் சேர்ந்து மேலும் 2 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்திய யூத பாரம்பரிய மையம், மாஸ்டர் கில் டேனியல்ஸ் கொல்லப்பட்டதை எண்ணி வருந்துகிறோம் என தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...