உலகம்ஏனையவைசெய்திகள்

நேபாள குடிமக்களை போருக்கு பயன்படுத்தாதீர்கள்..! இழப்பீடு வழங்க ரஷ்யாவிடம் அதிகாரிகள் கோரிக்கை

42764c268da4b2363ef75cfd89b8c9b8
Share

நேபாள குடிமக்களை போருக்கு பயன்படுத்தாதீர்கள்..! இழப்பீடு வழங்க ரஷ்யாவிடம் அதிகாரிகள் கோரிக்கை

தங்கள் நாட்டு குடிமக்களை உக்ரைன் மீதான போர் தாக்குதலில் பயன்படுத்துவதற்காக வேலைக்கு எடுக்க வேண்டும் என ரஷ்யாவிடம் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனுடனான போர் தாக்குதலுக்காக தங்கள் நாட்டு குடிமக்களை ரஷ்யா வேலைக்கு எடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நேபாள அதிகாரிகள் ரஷ்யாவிடம் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் போரில் 6 நேபாள கூலிப்படையினர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த அழைப்பானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நேபாளத்தின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் போரில் ரஷ்யாவால் ஈடுபடுத்தப்பட்டு கொல்லப்பட்ட நேபாளிகளின் பெயர் பட்டியல் வெளியிட்டுள்ளது.

அத்துடன் அதில், உயிரிழந்த நேபாளிகளின் உடலை ரஷ்யா தாயகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

கூடுதலாக அறிக்கையில்,  ரஷ்யாவிற்கு போரில் சேவையாற்றி வரும் நேபாளிகளை விடுவிக்கவும் மற்றும் போர் தாக்குதலின் போது உக்ரைன் ஆயுத படையால் கைது செய்யப்பட்டவர்களையும் விடுவிக்க நேபாள அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்கான நேபாள தூதர் மிலன் ராஜ் துலாதாரின் மதிப்பீட்டின் படி, கூலிப்படை ஆட்களாக ரஷ்ய ராணுவத்தில் 150 முதல் 200 நேபாளிகள் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....