tamilni 73 scaled
இலங்கைசெய்திகள்

பாடசாலை கல்வி முறைமையில் மாற்றம்

Share

பாடசாலை கல்வி முறைமையில் மாற்றம்

பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் சபை முதல்வர், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சின் வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டின் முன்னேற்றங்கள் மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், ஒவ்வொரு மாணவர்களும் 17 ஆண்டுகளில் பாடசாலைப் படிப்பை முடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி தெரிவித்துள்ளது.

இதன்படி, நான்கு வயதில் முன்பள்ளியும், ஆரம்பப் பிரிவு 1 முதல் 5ஆம் தரம் வரையிலும், கனிஷ்ட பிரிவு தரம் 6 முதல் தரம் 8 வரையிலும், சிரேஷ்ட பிரிவு தரம் 9 முதல் தரம் 12 வரையிலும் வகைப்படுத்தப்படவிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், உத்தேச புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம், 10ஆம் ஆண்டில் சாதாரணதரப் பரீட்சையையும், 12ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையையும் நடத்த கல்வி அமைச்சு முன்மொழிந்துள்ளது.

அதற்கமைய, சாதாரணதரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 9ல் இருந்து 7 ஆக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கு 517.05 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில், பாடசாலை பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக இரண்டாயிரம் மில்லியன் ரூபாவும், பாடசாலை சீருடைக்காக ஆறு மில்லியன் ரூபாவும், ஏழு இலட்சத்து இருபத்தி எட்டாயிரத்து நானூற்று எண்பது (728,480) பாடசாலை மாணவர்களுக்குக் காலணிகளை வழங்குவதற்கு இரண்டாயிரத்து ஐநூறு மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் மாணவர்களுக்கு மதிய உணவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...