4 19 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் பிடியில் 50 நாட்கள் சிக்கியிருந்த 9 வயது அயர்லாந்து சிறுமி: தந்தை கூறிய அந்த வார்த்தை

Share

ஹமாஸ் பிடியில் 50 நாட்கள் சிக்கியிருந்த 9 வயது அயர்லாந்து சிறுமி: தந்தை கூறிய அந்த வார்த்தை

பிணைக்கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக ஹமாஸ் படைகளின் பிடியிலிருந்து 50 நாட்களுக்கு பின்னர் 9 வயது அயர்லாந்து சிறுமி விடுவிக்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்து – இஸ்ரேலிய குடிமகளான Emily Hand அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் பிடியில் சிக்கினார். இஸ்ரேல் எல்லையில் இருந்து காஸாவுக்கு பணயக்கைதியாக கொண்டு செல்லப்பட்ட 240 பேர்களில் சிறுமி Emily Hand-ம் ஒருவர்.

இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காஸா பகுதியில் இன்னும் சிறை வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் குறைந்தது 30 குழந்தைகளில் இவரும் ஒருவர்.

இஸ்ரேல் – ஹமாஸ் படைகள் இடையிலான போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக தனது மகள் விடுவிக்கப்பட மாட்டார் என்ற அச்சத்தைப் பற்றி அவரது தந்தை முன்பு பேசியிருந்தார்.

எமிலியின் நீலக் கண்கள் என் கண்களைப் பார்ப்பதை நான் பார்க்கும் வரை, நான் எதையும் நம்பப் போவதில்லை என 63 வயதான தாமஸ் ஹண்ட் கண்கலங்கியிருந்தார்.

தற்போது போர் நிறுத்தம் தொடங்கிய இரண்டாவது நாளில் சிறுமி Emily Hand விடுவிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...