உலகம்செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பின்னடைவு

Share
tamilni 364 scaled
Share

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பின்னடைவு

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதிலும், பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவதிலும் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக இன்று முதல் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வரலாம் என இருதரப்பு தகவல்களும் வெளிவந்திருந்தன.

இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பு இடையே, 45 நாட்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து வருகிறது.

கடந்த மாதம் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்ட போது, அந்நாட்டைச் சேர்ந்த 240 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

அவர்கள் அனைவரையும் விடுவித்தால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் கூறி வருகிறது. இந்நிலையில், போர் நிறுத்தம், பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடர்பாக, இஸ்ரேல் – ஹமாஸ் இடையே, கட்டார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.

இது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, காசாவில் நான்கு நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் ஒப்புதல் வழங்கியது.

இதனடிப்படையில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட, 50 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக் கொண்டது. மேலும், 10 பிணைக் கைதிகளை ஹமாஸ் தரப்பு விடுவித்தால், கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்றும் இஸ்ரேல் கூறியது.

இதன்படி பிணைக் கைதிகளுக்கு ஈடாக, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 150 பாலஸ்தீனியர்களை, இஸ்ரேல் அரசு விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது.

இதற்கமைய நேற்று காலை 10:00 மணிக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதாக கூறப்பட்டது.

ஆனால், இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாச்சி ஹாங்பி, ”இந்த போர் நிறுத்தம் நடைமுறைக்கு வர சற்று தாமதம் ஏற்படும்,” என, தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாதுகாப்பு ஆலோசகரின் இந்த கடைசி நிமிட உரையாடலானது, போர் நிறுத்தத்தில் பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சில இறுதி முடிவுகள் குறித்து தெளிவு ஏற்பட்டதும், இன்று காலை முதல் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி ”இந்த ஒப்பந்தம் முடிந்தவுடன் போர் மீண்டும் தொடரும். 240 பிணைக் கைதிகளை மீட்டு, ஹமாஸ் படைகளை ஒழிப்பதே எங்கள் நோக்கம்,” என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
4 8
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை இழக்குமா அநுர தரப்பு..! வியூகம் வகுக்கும் சஜித்

நாடு முழுவதும் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஆளும் கட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் சிக்கல்...

5 8
உலகம்செய்திகள்

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்

இந்தியா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலை “தூண்டுதலில்லாததும், வெளிப்படையான போர் நடவடிக்கையும்” எனவும் பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ளது....

3 8
இலங்கைசெய்திகள்

நீதிமன்றில் சரணடைந்த பிரசன்ன ரணவீர

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரியவருகிறது. போலி ஆவணங்களைத்...

6 9
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு இந்தியாவின் பதிலடி! நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு...