tamilni 342 scaled
உலகம்செய்திகள்

இத்தாலியில் கவிழ்ந்த புலம்பெயர்ந்தோர் படகு

Share

இத்தாலியில் கவிழ்ந்த புலம்பெயர்ந்தோர் படகு

இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தின்போது 2 வயது குழந்தை ஒருவர் பலியாகியுள்ளதுடன் 8 பேர் காணாமல்போயுள்ளதாக இத்தாலிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 40 புலம்பெயர்ந்தோர் குறித்த படகிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் இத்தாலிய கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோன்று மற்றொரு படகில் நடுக்கடலில் சிக்கி தவித்த 576 புலம்பெயர்ந்தோரும் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியின் தெற்கே உள்ள லம்பேடுசா தீவு என்பது பல ஆண்டுகளாகப் புலம்பெயர்ந்தோர் பெருமளவில் வருகை தரும் இடம் என சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த ஆண்டு (2023) மட்டும் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் இத்தாலி கடல் வழியாக புலம் பெயர்ந்துள்ளதாக இத்தாலி உள்துறை அமைச்சக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

வட ஆப்பிரிக்காவிலிருந்து இத்தாலி அல்லது மால்டாவிற்கு மத்தியதரைக் கடல் வழியாக கடந்து செல்வது உலகின் மிகவும் ஆபத்தான பயணம் என்பதுடன் இந்த வழியில் பயணித்தவர்களில் 2,200 பேர் காணாமல் போய் இருப்பதாக இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
4 19
உலகம்செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை! புடினின் அறிவிப்புக்காக காத்திருக்கும் இஸ்தான்புல்

இஸ்தான்புல்லில் நாளை நடைபெறவிருக்கும் ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்...

3 20
உலகம்செய்திகள்

அமெரிக்காவிடமிருந்து நூற்றுக்கணக்கான விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்வதற்காக கட்டார் ஒப்பந்தம் செய்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump)...

2 28
உலகம்செய்திகள்

நீண்டகால எதிரிகளை ஒன்றினைய வலியுறுத்தும் அமெரிக்கா

இஸ்லாமியவாத தலைமையிலான அரசாங்கத்தின் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்குவதாக அமெரிக்கா திடீரென அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு...

1 18
இலங்கைசெய்திகள்

எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி அநுர

உள்ளுராட்சி மன்றங்களில் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக செயற்படும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை...