rtjy 195 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் பணயக்கைதிகள் ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்

Share

இஸ்ரேல் – ஹமாஸ் பணயக்கைதிகள் ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஹமாஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேலுடன் ஹமாஸ் அதிகாரிகள் போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் நெருங்கியிருக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

போர்நிறுத்தத்திற்கான முதல் ஒப்பந்தம் மற்றும் இரு தரப்பிலும் பாரிய அளவில் கைதிகளை விடுவிப்பது என்பது இறுதி நிலையில் உள்ளது எனவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கான பதில் தாக்குதலையும் இஸ்ரேல் தரப்பு முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த போரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 2,700 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய , ஹமாஸ் அமைப்பின் தளபதிகள் 3 பேர் ஒரே நாள் இரவில் சுட்டு கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்திருந்தது.

இது தொடர்பில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில்,

“நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். இந்த தருணத்தில், நிறைய கூறுவது சரியாக இருக்காது. விரைவில் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என கூறியுள்ளார்.

பணய கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் முன்னேற்றத்திற்கான விடயங்கள் தொடர்பில் நெதன்யாகு, அந்நாட்டு அரசுடன் கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்வர் என அந்நாட்டு அரச தகவல் தொடர்பாடல் அமைச்ச்சு கருத்து வெளியிட்டுள்ளது.

போர்நிறுத்தத்திற்கான முதல் ஒப்பந்தம் மற்றும் இரு தரப்பிலும் பாரிய அளவில் கைதிகளை விடுவிப்பது என்பது இறுதி நிலையில் உள்ளது என்றும் அரசின் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...

Woman Harassment
உலகம்செய்திகள்

சக பெண் விமானி மீது பாலியல் பலாத்கார முயற்சி: பெங்களூருவில் சீனியர் விமானி மீது வழக்குப்பதிவு!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 26 வயது விமானி ஒருவர், தான் வேலை செய்யும் விமான...