ஜோதிடம்
இன்றைய ராசி பலன் 17.11.2023 – Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 17.11.2023 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் நவம்பர் 17, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 1 வெள்ளிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் உள்ள மிருகசீரிஷம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள்
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட வேண்டிய நாள். கோபத்தால் உறவுகள் மற்றும் பணியிடத்தில் மனக்கசப்பு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடையே அனுசரித்துச் செல்லவும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகளை முடிக்க முயற்சிப்பீர்கள். உங்களின் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். உங்கள் மனைவியின் ஆலோசனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆட்சி மற்றும் அதிகாரம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். கூட்டாக செய்யக்கூடிய வேலை எளிதாக முடியும். உறவினர்கள் வகையில் ஒரு சில நல்ல செய்திகள் கிடைக்கும். என்ற அரசியலில் உள்ளவர்களுக்கு அவர்களின் முயற்சி வெற்றியைத் தரும். இன்று மாலை நேரத்தில் நண்பர்களுடன் உல்லாசமாக கழிப்பீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் செய்யக்கூடிய பயணத்தில் கவனம் தேவை. இன்று உங்களுக்குப் பிடித்த பொருளை இழக்கவோ அல்லது திருடப்படவோ வாய்ப்பு உள்ளது. எந்த ஒரு வேலையிலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். அலட்சியமான செயல்பாடு உங்களின் எதிர்காலத்திற்கு சிக்கலாக அமையும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் திட்டமிட்ட செயல்கள் வெற்றி பெறும். பணியிடத்தில் உங்களின் ஆலோசனை பாராட்டைப் பெற்றுத்தரும். உங்களின் செயல்பாடு மகிழ்ச்சியை தரும். மதிப்பும் மரியாதையும் கூறக்கூடிய இந்த நாளில் பண பலன்கள் உண்டாகும். நீங்கள் செய்யக்கூடிய சிறிய முதலீடு எதிர்காலத்தில் பெரிய லாபத்தை தரும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களின் அனைத்து பணிகளையும் முழு ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள். நம்பிக்கையுடன் செயல்படக்கூடிய இன்று கல்வி மற்றும் போட்டித் துறையில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும்.எதிரிகள் உங்களின் வேலையை எடுக்க சரி செய்யலாம்.உங்கள் வீட்டில் சுபா நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சொத்து வாங்குதல் மற்றும் விற்பது தொடர்பான பிரச்சனைகள் அல்லது வழக்குகள் முடிவுக்கு வரும். இன்று சொத்து சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களின் முயற்சிகள் குறுகிய காலத்தில் நல்ல பலனை பெற்றுத்தரும். இன்று சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மன மகிழ்ச்சியான மற்றும் நெருக்கம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். உங்கள் முன்னேற்றத்தை பார்த்து எதிரிகள் கூட பொறாமைப்படுவார்கள். குடும்பத்திலும், பணியிடத்திலும் சிறப்பான நாளாக அமையும். எதிர்காலத்திற்காக நீங்கள் செய்யக்கூடிய முதலீடு சிறப்பான பலனைத் தரும். ஒவ்வொரு விஷயத்திலும் நன்மை நடக்க கூடியதாக இருக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் முன்னெடுக்கக்கூடிய எந்த ஒரு வேலையிலும் துணையின் ஆலோசனை பெறுவதால் அதில் கூடுதல் வெற்றி பெற முடியும். இன்று நீங்கள் சில செலவுகளை எதிர்கொள்ள வேண்டியதற்கும். நீங்கள் விரும்பாமல் விட்டாலும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும். உங்களின் எதிர் நிலைமையை மனதில் வைத்துக் கொண்டு செலவுகளை செய்யவும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். பணியிடத்தில் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயலவும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் எந்த ஒரு புதிய வேலையை செய்ய நினைத்தாலும் அதில் நல்ல வெற்றி, அதற்கான நேரமும் கிடைக்கும். உங்கள் தந்தையின் உடல்நிலை குறித்து கவனமாக இருக்கவும். தேவையான மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. பணம் தொடர்பான சில சிக்கல்கள் ஏற்படலாம். இன்று கடன் கொடுப்பது, வாங்குவதை தவிர்க்கவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று வேலைவாய்ப்பை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வேலைகளில் நல்ல வெற்றியை பெற்றிட முடியும். அதனால் கூடுதல் முயற்சிகள் செய்யவும். இனிமையான பேச்சால் எதையும் சாதிக்க முடியும் என்பதால் இன்று உங்களின் பேச்சு மற்றும் செயலில் நிதானத்தை கடைப்பிடிக்கவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் சில பாதகமான செய்திகள் கேட்பீர்கள். உங்கள் மனம் அலைக்கழிக்கப்படும். என்று நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்களின் முயற்சிகளால் குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்த தகராறு, கருத்து வேறுபாடுகள் நீங்கும். இன்று நீங்கள் செய்யக்கூடிய எந்த ஒரு வேலை மட்டும் தொழிலிலும் பெரும் லாபத்தை சம்பாதிக்க முடியும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் துணையின் உடல்நிலை குறித்து கவலை ஏற்படும். என்று குழந்தைகளின் கல்வி தொடர்பான சில நல்ல செய்திகளை கேட்கலாம். மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய நாள். இன்று பழைய நண்பர்கள் அல்லது உங்களுக்கு பிடித்த உறவினர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். மூதாதையர் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஓரளவு முன்னேற்றம் தரக்கூடிய நாளாகவே இருக்கும்.