உலகம்
ஒற்றை மருத்துவமனை மட்டுமே இயங்குகிறது..! மோசமடையும் காசா நிலைமை
ஒற்றை மருத்துவமனை மட்டுமே இயங்குகிறது..! மோசமடையும் காசா நிலைமை
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரினால் வடக்கு காசாவில் ஒரே ஒரு மருத்துவமனை மட்டும் தான் இயங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் பாலஸ்தீனத்தின் காசா நகரம் முற்றிலுமாக சிதைந்துள்ளது.
காசா நகரை சுற்றி வளைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
அதே சமயம் இந்த போர் நடவடிக்கையில் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால் காசாவில் உள்கட்டமைப்பு வசதிகள் சிதைக்கப்பட்டு இருப்பதால் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரினால் வடக்கு காசாவில் ஒரே ஒரு மருத்துவமனை மட்டும் தான் இயங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
தீவிர சண்டையின் காரணமாக ஏற்பட்ட மின்தடை, மருத்துவ நுகர்பொருள், ஆக்ஸிஜன், உணவு, மற்றும் தண்ணீர் ஆகியவற்றின் பற்றாக்குறையால் காசா நகரம் மற்றும் வடக்கு காசாவில் உள்ள ஒரு மருத்துவமனையை தவிர அனைத்து மருத்துவமனைகளிலும் சேவைகள் நிறுத்தப்பட்டதாக செவ்வாய்கிழமை மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவில் உள்ள 30 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் ஒன்றில் மட்டுமே மருத்துவ வசதிகளை நோயாளிகள் பெற முடியும் என ஐ.நா தெரிவித்துள்ளது.
அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனையில் குறைந்தது 500 நோயாளிகள் தங்குவதற்கு முயற்சி செய்கிறார்கள்.