இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்கு அச்சுறுத்தல்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்கு அச்சுறுத்தல்
உத்தேச நாடாளுமன்ற தர நிலை சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர்களை நீக்க முடியும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விரைவில் தரநிலை சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும், அதற்கு முன்னர் பிரதமர் தினேஷ் குணவர்தன இது குறித்து கட்சி தலைவர்களுடன் பேசுவார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சித் தலைவர்களுடன் பிரதமர் பேசி, அதில் தேவையான திருத்தங்களை அவர் செய்வார் என்று அமைச்சர் விஜயதாச கூறியுள்ளார்
சோல்பரி பிரபு காலத்தில் இருந்த சட்டமும், எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் சபையில் இருந்து வெளியேற்றுவதற்கான அதன் விதிகளும் இன்னும் நடைமுறையில் இருப்பதாக நீதிமன்றங்கள் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.