அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய மாணவன்
அமெரிக்காவில் கத்திக்குத்திற்கு இலக்காகி படுகாயம் அடைந்த இந்திய மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள வால்பரைசோ நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் 24 வயதான வருண் ராஜ் என்ற இந்திய மாணவரை, ஜோர்டான் ஆண்ட் ராட் என்ற அமெரிக்க இளைஞன் கத்தியால் குத்தியுள்ளார்.
அதில் படுகாயம் அடைந்த வருண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் வால்பரைசோ பல்கலையில் கணினி அறிவியல் துறையில் கல்வி கற்ற வந்ததாக கூறப்படுகிறது.
ஜோர்டான் ஆண்ட்ராட்டை கைது செய்த பொலிஸ் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவர் பொலிஸில் அளித்த வாக்குமூலத்தில், வருண் ராஜ் உடன் நேரடியாக பேசியது கிடையாது. ஆனால், அவரால் அச்சுறுத்தல் இருப்பதை அறிந்தேன். அதனால் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக ஜோர்டான் ஆண்ட்ராட் கூறியுள்ளார்.