இலங்கை
மின்சார சபை பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
மின்சார சபை பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
மின் தடை தொடர்பான முறைப்பாடுகளை டிஜிட்டல் முறையில் அனுப்புமாறு இலங்கை மின்சார சபை, பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த கூறுகையில், சீரற்ற காலநிலையில் ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை CEB Care மொபைல் அப்ளிகேஷன் அல்லது 1987 அழைப்பு நிலையத்தின் சுய சேவை மற்றும் IVR அமைப்பு போன்ற டிஜிட்டல் வழிமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும்.
சீரற்ற காலநிலை காரணமாக மின் தடைகள் தொடர்பில் அழைப்பு நிலையங்களுக்கு கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனவே, டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தி முறைப்பாடுகளை அனுப்புமாறு நுகர்வோரை இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.
மேலும், இலங்கை மின்சார சபை தற்போதுள்ள நிலைமைகளை கருத்தில் கொண்டு மின்தடைகளை விரைவில் மீளமைக்க 24 மணிநேரமும் செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.