rtjy 69 scaled
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயம் அதிகரிக்கப்படும்

Share

அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயம் அதிகரிக்கப்படும்

இந்த வருடம் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயம் அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிடுகின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த சம்பள அதிகரிப்பு இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் எவ்வளவு சம்பளம் உயர்த்தப்படும் என்பது வரவு செலவுத் திட்டத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க தகவல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

மேலும், அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார்.

சம்பள அதிகரிப்பு அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 15 இலட்சம் அரச ஊழியர்களுக்கு இந்த சம்பள அதிகரிப்பு கிடைக்குமென செய்திகள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...

Trump Modi.jpg
செய்திகள்இந்தியா

மோடி – ட்ரம்ப் தொலைபேசி உரையாடல் பலன் அளித்தது: இந்தியப் பொருட்கள் மீதான வரியை 18% ஆகக் குறைத்தது அமெரிக்கா!

இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே நிலவி வந்த வர்த்தக முறுகல் முடிவுக்கு வந்துள்ளதோடு, இரு...

MediaFile 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

24 மணிநேரத்தில் தொடர் விபத்துக்கள்: 6 பேர் பரிதாப பலி! உயிரிழந்தவர்களில் 3 பேர் இளைஞர்கள்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று...

Parliment 1200px 22 11 09
செய்திகள்அரசியல்இலங்கை

புதிய கணக்காய்வாளர் நாயகத்தைத் தெரிவு செய்ய அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது!

நீண்டகாலமாக வெற்றிடமாக நிலவிவரும் கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) பதவிக்கு ஒருவரை நியமிப்பது குறித்து தீர்மானிப்பதற்காக,...