23 6545fa12db849
உலகம்செய்திகள்

ஆபத்தான முறையில் பறந்த சீனப் போர் விமானம்; கனடா சீற்றம்

Share

ஆபத்தான முறையில் பறந்த சீனப் போர் விமானம்; கனடா சீற்றம்

கனேடிய இராணுவ ஹெலிகாப்டருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக சீனப் போர் விமானம் பறந்தது கனடாவின் கோபத்தைத் தூண்டியுள்ளது.

கனடாவின் HMCS Ottawa இராணுவத்திற்கு சொந்தமான CH-148 Cyclone ஹெலிகாப்டருக்கு முன்னால் சீனாவின் J-11s போர் விமானம் ஆபத்தான முறையில் பறந்தது ஆத்திரமூட்டலைத் தூண்டியதாக கனடாவின் தேசிய பாதுகாப்பு துறை (Department of National Defence) தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தென் சீனக் கடலில் Paracel தீவுக்கு அருகில் சர்வதேச எல்லையில் பயணித்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹெலிகாப்டர் மீது சீன விமானம் சுட்டதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் (Bill Blair) தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் ஒருமுறை அதே ஹெலிகாப்டரை சீன போர் விமானம் தக்க முயன்றதாக கூறப்படுகிறது

மேலும், இந்த சம்பவம் குறித்து தனது கவலையை சீனாவிடம் தெரிவிப்பதாகவும் பிளேயர் கூறினார். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகக்கூடிய ஒரு சம்பவம் இது என்றும் அவர் கூறினார்.

சீன விமானப்படையின் ஆபத்தான இந்த நடத்தை இரண்டாவது முறையாக நடந்துள்ளது. கடந்த மாதம், ஒரு சீன ஜெட் விமானம் ஐநா பணியின் ஒரு பகுதியாக இயங்கிய கனடாவின் கண்காணிப்பு விமானம் ஒன்றின் 16 அடிக்குள் வந்ததாக, பிளேயர் கூறினார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...