tamilni 36 scaled
உலகம்செய்திகள்

காசா போரில் திருப்பம்: புது யுக்தியை கையாளும் இஸ்ரேல்

Share

காசா போரில் திருப்பம்: புது யுக்தியை கையாளும் இஸ்ரேல்

காசா போரில் இஸ்ரேலுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ள ஹமாஸின் சுரங்கங்களை சமாளிக்க புதிய யுக்தி ஒன்றை கையாள இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

அதன்படி ஸ்பாஞ்ச் குண்டுகளை பயன்படுத்த இஸ்ரேல் இராணுவம் முடிவு செய்துள்ளது.

ஸ்பாஞ்ச் குண்டுகள் என்பவை வெடிபொருட்கள் அல்ல. இவை இரு வகை இரசாயனங்கள் அடங்கிய சிறு பிளாஸ்டிக் கேன் வடிவில் இருக்கும்.

ஸ்பாஞ்ச் குண்டுகளை வீசியதும், அதில் இருந்து பொங்கி வரும் இரசாயன நுரை, சில விநாடிகளுக்குள் பெரியளவுக்கு பரவி, அந்த இடத்தையே கட்டி போன்ற தன்மையால் நிரப்பி விடும்.

இவற்றை சுரங்கத்தின் வாயில், அல்லது உள்ள பதுங்குக் குழிகளில் வீசினால், அதன் வழியாக ஹமாஸ் போராளிகள் வெளியே வந்து தாக்குதல் நடத்த முடியாது.

காசாவுக்குள் தற்போது வரை இஸ்ரேல் இராணுவம் முழுவதுமாக நுழையாததற்கான காரணங்களில் முக்கியமானது, ஹமாஸ் அமைத்துள்ள சுரங்கங்கள்.

காசாவில் சுமார் 20 ஆண்டுகள் கடுமையாக முயன்று பூமிக்குள் வலைப்பின்னல்களைப் போல ஹமாஸ் உருவாக்கி வைத்துள்ள சுரங்கங்களில் இருந்து போராளிகள் வெளியே வந்து எதிர்பாராத வகையில் திடீர் தாக்குதல் நடத்தினால் தங்கள் தரப்பில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்படும் என்பதே இஸ்ரேல் இராணுவனத்தின் தயக்கத்துக்குக் காரணம்.

2021-இல் 96 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஹமாஸின் சுரங்கங்களை அழித்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது. ஆனால், தங்கள் வசம் 483 கிலோ மீட்டர் அளவுக்கு சுரங்கங்கள் இருப்பதாகவும், இஸ்ரேல் அழித்தது 5 சதவீதம் கூட இல்லை எனவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இதனால் ஹமாஸ் அமைப்பின் இந்த வியூகத்தை முறியடிக்க இஸ்ரேல் இராணுவம் அறிமுகப்படுத்தி இருக்கும் திட்டம் தான் ஸ்பாஞ்ச் குண்டுகள் எனப்படும் நவீன இரசாயன ஆயுதம்.

மிகவும் ஆபத்தான இரசாயனங்களைக் கொண்டு ஸ்பாஞ்ச் குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஸ்பாஞ்ச் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தத் தொடங்கும் போது, காசா யுத்தம் புதிய பரிமாணத்துக்குச் செல்லக் கூடும் என இராணுவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...