rtjy 10 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

லண்டனில் சாதித்துவரும் இலங்கை இரட்டை சகோதரிகள்…!

Share

லண்டனில் சாதித்துவரும் இலங்கை இரட்டை சகோதரிகள்…!

இலங்கையில் பிறந்து தற்போது லண்டனில் வாழ்ந்துவரும் சகோதரிகள் இருவர் ஹொட்டல் தொழிலில் பிரபல்யமடைந்து வருகிறார்கள்.

இலங்கையிலுள்ள கண்டியில் பிறந்து, கொழும்பில் வளர்ந்த வசந்தினி, தர்ஷினி ஆகிய இரட்டை சகோதரிகளே லண்டனில் ஹொட்டல் துறையில் சாதித்து வருகின்றனர்.

இவர்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை விரும்பி, 2011ஆம் ஆண்டு தங்கள் மற்ற சகோதரிகளுடன் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்.

லண்டனில் பல இடங்களுக்குச் சென்று பார்த்தும் இலங்கை உணவு கிடைக்காததால், சகோதரிகளுக்கு லண்டனில் இலங்கை உணவகம் அமைக்க யோசனை தோன்றியுள்ளது.அதன் விளைவாக கறபிஞ்சா என்ற உணவகத்தை நிறுவியுள்ளனர்.

வசந்தினி, தர்ஷினி சகோதரிகளுக்கு தங்கள் தாயிடம் கற்ற தமிழர்களின் உணவு செய்முறையையும், தங்களை கவனித்துக்கொண்ட பெண்ணிடம் கற்ற சிங்களவர்களின் உணவு செய்முறையையும் உபயோகித்து முதலில் ஒரு உணவகம் ஆரம்பித்த சகோதரிகள், பின்னர் நான்கு உணவகங்களை அமைத்துள்ளனர்.

தங்கள் தாயைப் போலவே, உணவகத்துக்குத் தேவையான மசாலா பொடிகளையெல்லாம் தாங்களே தயார் செய்து, அப்படியே வீட்டுச் சுவையில் உணவுகளை தயாரித்து வழங்குகிறார்கள்.

லண்டனில் வாழும் இலங்கையர்களும் தங்கள் ஊர் உணவை சுவைக்க ஓர் வாய்ப்பாக உள்ளது.

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...