rtjy 357 scaled
செய்திகள்விளையாட்டு

உலகின் சிறந்த கிரிக்கெட் அணி தலைவராக ரோஹித் சர்மா

Share

உலகின் சிறந்த கிரிக்கெட் அணி தலைவராக ரோஹித் சர்மா

உலகிலேயே சிறந்த கிரிக்கெட் அணித் தலைவர் என்ற பெருமையை இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

உலகின் சிறந்த கிரிக்கெட் அணித் தலைவர்களாக அறியப்படும் ரிக்கி பொண்டிங், ஹன்சே குரோனியே, ஸ்டீவ் வாஹ், விராட் கோலி, டோனி ஆகியோரின் நிலையை முறியடித்து ரோஹித் சர்மா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் போட்டி, ரி20 என மூன்று வித கிரிக்கெட்டையும் சேர்த்து 100 போட்டிகளுக்கு மேல் தலைவராக இருந்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா அதிக வெற்றி சதவீதம் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ரோஹித் சர்மா தலைவனாக களமிறங்கினார். அது சர்வதேச போட்டிகளில் தலைவராக அவரது நூறாவது போட்டி ஆகும்.

தனது நூறாவது போட்டியில் 87ஒட்டங்கள் பெற்று இங்கிலாந்து அணியை 100 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்த முக்கிய காரணமாக ரோஹித் சர்மா காணப்பட்டார்.

இந்த வெற்றியுடன் சேர்த்து ரோஹித் சர்மா தலைவனாக நூறு போட்டிகளில் 74 ஆவது வெற்றியை பதிவு செய்தார். இதன் மூலம் தலைவனாக 74 சதவிகித வெற்றியை பதிவு செய்து நூறு போட்டிகளுக்கும் மேல் தலைவனாக இருந்தவர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

1.ரோஹித் சர்மா – 74 சதவீதம்

2.ரிக்கி பொண்டிங் – 70.5 சதவீதம்

3.ஆஸ்கார் ஆப்கன் – 69.6 சதவீதம்

4.ஹன்சே குரோனியே – 67 சதவீதம்

5.ஸ்டீவ் வாஹ் – 66.6 சதவீதம்

இந்திய அணியின் தலைவனாக இருந்தவர்களில், விராட் கோலி 213 போட்டிகளில் 135 வெற்றிகளை பெற்று 63.38 சதவீதத்துடனும் டோனி 332 போட்டிகளில் 178 வெற்றிகளை பெற்று 53.61 சதவீதத்துடனும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...